கிராம உதவியாளர் பணிக்கு அழைப்பு!

ஒட்டன்சத்திரம், ஜூலை 8-ஒட்டன்சத்திரம் தாலுகாவில் கரியாம்பட்டி, கொ.கீரனுார், வெரியப்பூர்
கிராமங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள், நேரடியாகவும், வேலைவாய்ப்பு முதுநிலைபடியும் நிரப்பப்பட உள்ளன.கிராம உதவியாளர் பணிக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் எட்டாம் வகுப்பு தோல்வி அடைந்தவர், நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிய வேண்டும். கரியாம்பட்டி-பொது பிரிவினர் முன்னுரிமையற்றோர், கொ.கீரனுார்: ஆதிதிராவிடர் மகளிர் முன்னுரிமையற்றோர், வெரியப்பூர் -பொது பிரிவினர் முன்னுரிமையற்றோர்.01-07-2018 ன் படி வயது வரம்பு, குறைந்தபட்சம் அனைத்து பிரிவினருக்கும் 21 வயது. அதிகபட்சம்-ஓ.சி க்கு 30 வயது, எஸ்சி(ஏ),எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி க்கு 35 வயது.சம்பந்தப்பட்ட கிராமங்களில் தகுதியானவர்கள் வரும் 20.07.2018 க்குள் ஒட்டன்சத்திரம் தாசில்தாருக்கு விண்ணப்பிக்க அனுப்ப வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...