வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை... நடந்தது என்ன?

குழந்தை கடத்தல் பீதியால் பலர் அடித்துக் கொல்லப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம் தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் குழந்தைகளை கடத்தும் கும்பல் அலைவதாக சமூகவலைதளங்களில் பொய்யான செய்திகள் பரவின. சிலர் திட்டமிட்டு பரப்பிய இந்த தகவலால் குழந்தை கடத்தல் தொடர்பாக மக்கள் பீதியடைந்தனர்.


தமிழகத்திலும் குழந்தை கடத்த வந்தாக கூறி பெண் ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்தது. இதுபோலவே, கர்நாடகா, ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்களிலும் சம்பவம் நடந்தன. மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலத்தில் அண்மையில் மீண்டும்இதுபோன்ற பரிதாபச் சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த வதந்திகள் பரவுவதற்கு ‘வாட்ஸ் ஆப்’ போன்ற சமூகவலைதளங்களே மிக முக்கிய காரணம் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து குழந்தை கடத்தல் உள்ளிட்ட வதந்திகளை பரப்புவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு கூறப்பட்டுள்ளதாவது:

‘‘குழந்தை கடத்தப்படுவதாக கூறி வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் இதுபோன்ற வதந்திகள் கடுமையாக பரவ வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்கள் காரணமாக இருப்பது வேதனையளிக்கிறது.

இந்த சேவையை வழங்கும் நிறுவனங்கள் அவற்றை பயன்படுத்துவோர் உரியமுறையில் செயல்படுகின்றனரா, சேவை சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்வது அவசியம். மோசமான செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும்,பொறுப்பும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உள்ளன. எனவே திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 20 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...