கால் செய்தால் வீடு தேடி போலீஸ்' - மதுரை காவல் ஆணையரின் புதிய திட்டம்!

மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில், வார்டுக்கு ஒருவர் என்ற கணக்கில்
எஸ்.ஐ-களை நியமித்து புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளார், கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.

மதுரை சிட்டிக்குள் 17 காவல் நிலையங்கள் மட்டுமே இருப்பதால், பொதுமக்களால் காவல்துறையை உடனே அணுக முடியவில்லை. இதனால், மாநகருக்குள் குற்றச்செயல்கள் அதிகரித்துவருகின்றன. வரும் காலத்தில் குற்றங்களைக் குறைக்கவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கவும், பொது மக்கள் காவல் துறையை எளிதாக தொடர்புகொள்ள வசதியாக, இந்த புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளார், காவல் ஆணையர் தேவாசீர்வாதம். வார்டுக்கு ஒரு எஸ்.ஐ என்ற கணக்கில், மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கும் எஸ்.ஐ-களை வார்டு ஆபீசராக நியமித்து, அவர்களின் மொபைல் எண்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...