வெளிநாட்டில் படிக்க செல்லும் மகளுக்காக ரூ.10 கோடியில் மாளிகை!

எடின்பரோ: ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க செல்லும் தனது மகளுக்காக, இந்திய கோடீசு
வரர் ஒருவர் ரூ.10
கோடி மதிப்பிலான மாளிகையை ஒன்றை வாங்கியுள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள "ஈடன் மாளிகை'யை, அந்தக் கோடீசுவரர் ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளார். 1860-ல் கட்டப்பட்ட இந்த மாளிகை, முதல் உலகப் போரில் இங்கிலாந்தின் படை தளபதி இயர்ல் ஹேக்குக்குச் சொந்தமானது. 8 படுக்கையறைகளைக் கொண்ட இந்த மாளிகையில் திரையரங்கம், மது குடிக்கும் இடம், 5 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழுவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.
மேலும், தனது மகள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில், அவரைக் கவனித்துக் கொள்ள மேலாளர் ஒருவர், 3 பாதுகாவலர்கள், தோட்டக்காரர் , பணிப்பெண் , சமையல்காரர் ், தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவுகளில் சிறந்த தனிப்பட்ட சமையல்காரர் , 3 உதவியாளர்கள், வாகன ஓட்டுநர் உள்பட 12 வேலையாட்களை நியமித்துள்ளார்.
ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், "இந்த நகரத்தில் 20,000 க்கும் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். அவர்களின் கண்களிலிருந்து தப்பித்து, மிகப் பெரிய மாளிகையில் அந்தப் பெண் தனித்து வாழ முடியாது.
மேலும், 12 பணியாட்களுடன் ஒரு மாளிகையில் தனித்து வசிக்கும் போது, இந்தப் பல்கலைக்கழகம் அளிக்கும் முழுச் சுதந்திரத்தையும் அவரால் அனுபவிக்க முடியாது' என்று தெரிவித்தார்.
மற்றொரு மாணவர் ஒருவர், "தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில், பணியாட்களை வைத்துக்கொண்டு தனித்து வாழ்வது என்பது மிகச் சிறந்த ஒரு முடிவாக இருக்காது' என்று தெரிவித்தார். ஆனால் அந்தக் கோடீசுவரர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...