ஆபத்தான 328 மருந்துகளுக்குத் தடை!


மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய 328 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விதித்துள்ள தடை உடனடியாக அமலுக்கு வந்தது. மேலும் 6 மருந்துகளுக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதியன்று, 344 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் 5 மருந்துகள், இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டன. இந்த தடையை எதிர்த்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் கழகம், தடை விதிக்கப்பட்ட மருந்துகளை ஆய்வு செய்யும்படி கேட்டுக்கொண்டது.

இதன்படி, மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் கழகம் ஆய்வு மேற்கொண்டபோது 328 மருந்துகளில் வேதிப் பொருட்களின் சேர்க்கை விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனவும், இவை மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு, தற்போது 328 மருந்துகளைத் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தடை விதிக்கப்பட்ட 344 மருந்துகளில் 15 வகை மருந்துகள் 1988ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதிக்கு முன்பே உற்பத்தி செய்யப்பட்டுவிட்டதால், அவற்றுக்கு விலக்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

அரசு தடை விதித்துள்ள மருந்துகளில் சேரிடான் (வலி நிவாரணி), க்ளூகோநாம் பிஜி (ஆன்டி பயோடிக்), டாசிம் ஏஇசட் உட்பட புகழ்பெற்ற பல மருந்துகளும் அடக்கம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...