தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகள் இயங்க தேர்வுத்துறை தடை: பள்ளி நிர்வாகிகள் கலக்கம்

தமிழக முழுவதும் பொதுத்தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் அன்றாட வகுப்புகள் நடத்தவும், பள்ளி அலுவலகங்கள் இயங்கவும் தமிழகஅரசு தேர்வுத்துறை தடை விதித்திருப்பதால் மெட்ரிக்
பள்ளி நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் முடிவுற்று, 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 27 முதல் தொடங்கியது. சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர்கள் 2020 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 98 தேர்வு மையங்கள் உள்ளது. தேர்வுகளை கண்காணிக்க கடலூர் மாவட்டத்தில் சுமார் 200 ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்ட 65 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழக முழுவதும் பொதுத்தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் அன்றாட வகுப்புகள் நடத்தவும், பள்ளி அலுவலகங்கள் இயங்கவும் தமிழகஅரசு தேர்வுத்துறை தடை விதித்துள்ளது. மேலும் தேர்வு மையப் பள்ளிகளில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களையும், தலைமை ஆசிரியர்களாக உள்ள முதன்மைக் கண்காணிப்பாளர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும், பள்ளிகளில் உள்ள ஜெராக்ஸ் இயந்திரங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை இணை இயக்குநர் ஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சங்கத் தலைவர் சி.ஆர்.லட்சுமிகாந்தன், செயலாளர் வீனஸ் எஸ்.குமார் ஆகியோர் தெரிவித்தது: 12-ம் வகுப்பு தேர்வு மையங்களாக உள்ள பள்ளிகளில் 11 பணி நாட்கள், 10-ம் வகுப்பு தேர்வு மையங்களாக உள்ள பள்ளிகளில் 7 பணி நாட்கள், இத்தேர்வுகளுக்கு முன்னேற்பாடு என்ற வகையில் மேலும் 2 நாட்கள் உள்ளிட்ட மொத்தம் 24 நாட்கள் பள்ளியினுடைய அன்றாட கல்விப் பணிகள் முடங்கிப் போகின்றன. கடலூர் கல்வி மாவட்டத்திற்கு மட்டும் திடீரென தலைமை ஆசிரியர்களையும், அமைச்சுப் பணியாளர்களையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதன் மூலம் அவர்களை சந்தேகிக்கும் வகையில் உள்ளதால் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த ஏற்பாட்டின் மூலம் பயணச்செலவும் மற்றும் படிச்செலவு என்ற வகையில் அரசு கூடுதலான செலவு ஏற்படுகிறது.
எனவே தேர்வு மையங்கள் நேர்மையாகவும், கண்டிப்பாகவும் இயங்க வேண்டுமென்றால் தற்போது பின்பற்றப்படும் பத்தாம்பசலித்தனமான வழிமுறைகளை கைவிட்டு மாற்று வழிகளை தேர்வுத்துறை சிந்திக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம் பிளஸ்டூ மாணவர்களுக்காக நடத்திய தொழிற்கல்விக்கான நுழைவுத்தேர்வுகளில் எந்தவிதமான புகாரும் எழவில்லை என்பதையும் அரசு தேர்வுத்துறை கவனத்தில் கொண்டு வேகமான முறையிலும் சுமூகமான முறையிலும் தேர்வுகளை நடத்த திட்டமிட வேண்டும் என்கின்றனர் சி.ஆர்.லட்சுமிகாந்தன், வீனஸ் எஸ்.குமார் ஆகியோர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...