தபாலில் அனுப்பி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் விடைத்தாள் மாயமானது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் 230
மாணவர்கள் எழுதிய விடைத்தாள் சத்தியமங்கலத்தில் இருந்து தபால் மூலம் திண்டிவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இன்று காலை இந்த விடைத்தாள் வந்து சேரவில்லை என புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கோட்டாட்சியர் மீனா, தபால் ஊழியரிடம் விசாரணை நடந்து வருகிறார்.