*நீண்ட போராட்டதிற்க்குப்பின்புவெற்றிக்கனி கண்ணில் தெரிகிறது.
*நான்கு ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்த நமது பணிமாறுதல்
வழக்கு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வருகிறது.
*இதுவரை நமது வழக்கை கண்டுகொள்ளாத அரசு தற்போது அடுத்த பணி நியமனதிற்க்காக வழக்கு விசாரணையில் ஆஜரானது.
* SSTA இயக்கத்தின் சார்பில் முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கு எண் IA NO 1617/2013 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
*நமது இயக்கத்தின் சார்பில் உச்ச நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு K .ராமமூர்த்தி ,டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மற்றும் அவருடய புதல்வி திருமதி.சோபா அவர்களும், அவர்களது உதவி வழக்கறிஞர்கள் விசாரணைக்கு வந்திருந்தனர்.
*வழக்கு 05/04/2013 அன்று காலை 7 ஆம் எண் கோர்டில் 3 ஆவது ITEM ஆக வழக்கு விசாரணை காலை 10.45 மணியளவில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
*வழக்கில் ஒவ்வொரு வழக்கறிங்கர்களும் அவர்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர்.அனைத்தையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்கள் வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
*வழக்கில் அரசு தாக்கல் செய்த அவிடவிடில் மாவட்ட பணிமாறுதல் பற்றி ஒரு வார்த்தை கூட ,ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை.நம்மைப்பற்றி எந்த விளக்கமும் தரப்படவில்லை.இருப்பினும் நமது மூத்த வழக்கறிஞர் நமக்கு தெளிவான உத்தரவினை பெற்றுத்தருவார்.
*முடிக்கவே முடியாது!!! ஐந்தாண்டு காலத்தில் அதுவாகவே மாறுதல் வந்துவிடும் என்று கூறியதை எல்லாம் தகர்த்து இறுதி விசாரணையை நெருங்கி உள்ளோம்.விரைவாக வெற்றி பெறுவோம்.
