மசினகுடி அருகே, சிங்காரா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 2 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அவர்களுக்கு 2 ஆசிரியர்கள்
பாடம் நடத்துகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள, சிங்காரா மின்நிலையம் பகுதியில், கடந்த 1951ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அப்போது, மின் நிலையத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களின் குழந்தைகள், அங்கு கல்வி பயின்று வந்தனர். நாளடைவில், பணிகள் குறைந்து, அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்த காரணத்தால், பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கை குறையத் துவங்கியது. தற்போது இங்கு, மாணவர்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தை தொட்டுள்ளது. இப்பள்ளியில், ஒரு தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் என, இரண்டு பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். நான்கு மாணவர்கள் மட்டுமே ரெகுலராக, வந்து செல்வதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நாம் சென்று பார்த்த நாளில், இப்பள்ளிக்கு 4ம் வகுப்பு மாணவி திவ்யா, 5ம் வகுப்பு மாணவன் மணிகண்டன் ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர். இவர்களும், சிங்காரா சேர்ந்த மாணவர்கள் இல்லை; 7 கி.மீ., தொலைவில் உள்ள மசினகுடி பகுதியில் இருந்து, பஸ்சில் வந்து செல்கின்றனர். சிங்காரா பள்ளி நிலவரம் குறித்து, மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இப்பள்ளியை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, சிங்காரா பள்ளி மாணவர்களின், எண்ணிக்கையை உயர்த்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.