குழந்தைகளுக்கான "கன்டியூவல் ஆம்புலேடட் பெரிடோனியல் டயாலிசிஸ்'(சி.ஏ.பி.டி.,) செய்வதற்கு, மாதம் ரூ. 15
ஆயிரம் செலவாகிறது. இதை அரசு மருத்துவமனைகளில், விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இலவசமாக வழங்க, அரசு முன்வர வேண்டும்.
நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு, "கதீட்டர்' முறையில் கை அல்லது கழுத்தில் "டியூப்' மூலம் ரத்த சுத்திகரிப்பு (ஹீமோ டயாலிசிஸ்) செய்யப்படுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி, மொத்தம் எட்டு மணி நேரம், இச்சிகிச்சையை, வாழ்நாள் முழுதும் செய்ய வேண்டும். பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ரத்தம் குறைவாக இருப்பதால், "ஹீமோ டயாலிசிஸ்' செய்யும் போது, ரத்த அழுத்தம் குறையலாம். வேறு பிரச்னைகளும் ஏற்படும். எனவே, சி.ஏ.பி.டி., செய்வதே சிறந்தது என, டாக்டர்கள் நினைக்கின்றனர். இதுவும் வாழ்நாள் சிகிச்சை என்றாலும், குழந்தைகள் மருத்துவமனையில் இருக்க வேண்டியதில்லை. இதற்கென விசேஷ பைகள் ஒரு லிட்டர் முதல் இரண்டு லிட்டர் அளவுகளில் கிடைக்கும். இதில் சுத்தமான தண்ணீர் நிரப்பி, வயிற்றோடு இணைக்கப்படும். எந்த அசவுகரியமும் இன்றி பள்ளி செல்லலாம், விளையாடலாம். நான்கு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து, அந்தப் பையை கழற்றி விட்டு, புதிய பை மாற்ற வேண்டும். வீடு சுகாதாரமாக இருந்தால், பெற்றோருக்கு செய்முறையை சொல்லித் தருவதன் மூலம், அவர்களே பையை மாற்றலாம். வாரம் ஒருமுறை நர்ஸ் மட்டும் பரிசோதனை செய்யலாம்.
ஒரு பையின் விலை குறைந்தது ரூ.150 வீதம், ஒரு நாளைக்கு மூன்று பைகள் மாற்ற வேண்டும். மாதத்திற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். தற்போது இ.எஸ்.ஐ., உறுப்பினர்களுக்கு மட்டும், அந்த மருத்துவமனைகளில் விசேஷ பைகள், இலவசமாக தரப்படுகின்றன. மதுரை அரசு மருத்துவமனையில் இதுவரை மூன்று குழந்தைகளுக்கு, டீன் மோகன் நிதியுதவியுடன் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், "ஹீமோ டயாலிசிஸ்' சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. சி.ஏ.பி.டி.,க்கு இதுவரை அனுமதி இல்லை. நிரந்தர சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறைவு தான். எனவே, விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசே இச்செலவை ஏற்க முன்வந்தால், ஏழைக் குழந்தைகள் பயன்பெறுவர்.