கணித தேர்வில் தவறான கேள்விக்கு 6 மதிப்பெண்: தேர்வுத்துறை

"பிளஸ் 2 கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட 47வது கேள்வியை, மாணவர்கள், "தொட்டிருந்தால்" அதற்குரிய 6 மதிப்பெண்,
முழுமையாக வழங்கப்படும்" என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி மிகவும் முக்கியமான கணித தேர்வு நடந்தது. இதில் ஆறு மதிப்பெண் பகுதியில் 47வது கேள்வி தவறாக கேட்கப்பட்டிருந்தது. "இதற்குரிய 6 மதிப்பெண்ணை, முழுமையாக தேர்வுத்துறை வழங்க வேண்டும்" என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஆய்வு செய்த தேர்வுத்துறை 47வது கேள்வியை, "தொட்டிருந்தால்" அதற்குரிய ஆறு மதிப்பெண்ணும், முழுமையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன், நேற்று கூறுகையில், "குறிப்பிட்ட கேள்வியின்படி விடை அளித்தால் சரியான விடை வருகிறது என ஆசிரியர்கள் தெரிவித்தனர். எனினும், மாணவர்கள் குழப்பம் அடைந்ததாக, தகவல் வந்துள்ளது. எனவே, அந்த கேள்வியை, எழுதியிருந்தால் அதற்குரிய மதிப்பெண் முழுமையாக வழங்கப்படும்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...