லோக்சபா தேர்தல் விதிமுறை மீறல்களை அதிகாரிகளின்
கவனத்திற்கு கொண்டுவர விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகளிலும்
கிராம இளைஞர் விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில், எந்த அரசியல் கட்சியையும் சாராத இளைஞர்கள், நான்கு முதல் ஐந்து பேர் வரை உறுப்பினர்களாக இருப்பர். ஓட்டிற்காக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்பு வழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக தங்களது மொபைல் போனில் படம் பிடித்து virudhunagar2014complaints@gmail.com என்ற இணையதள முகவரியில் கலெக்டருக்கு அனுப்பலாம்.
மேலும், விதிமுறை மீறல் தொடர்பாக தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் 1800 425 7039 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம், என அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுமென, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.