லோக்சபா தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கை இன்று
வெளியிடப்பட்டது. இதில் உரிய நேரத்தில் பணிகளை முடிக்காத
அரசு ஊழியர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார்.
ஊழலற்ற இந்தியா அமைவதில் ஆம் ஆத்மி கட்சி அக்கறை கொண்டுள்ளது. நாட்டில் ஊழலை ஒழிக்க கட்சி பாடுபடும். மத்தியில் குவிந்துள்ள அரசியல் அதிகாரங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். ஊழலில் ஈடுபடுவோர்களுக்கு விரைவில் தண்டனை வழங்க வகை செய்யும் ஜன்லோக்பால் மசோதா கொண்டுவரப்படும். இம்மசோதாவின் வரம்புக்குள் பியூன் முதல் பிரதமர் வரை கொண்டுவரப்படுவர்.
உரிய நேரத்தில் தங்களது பணிகளை முடிக்காத அரசு ஊழியர்களுக்கு தண்டனை வழங்கப்படும். டில்லி மாநில காவல்துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும். அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். விசாரணை அறைகளிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்படும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதன் நகல்களை யார் வேண்டுமானாலும் கேட்டுப் பெறலாம். டில்லி மாநில பாதுகாப்பு உரிமை மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு பெற்றுத் தரப்படும். போலீஸ் ஸ்டேஷனில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுத்தால் அது கிரிமனல் குற்றமாக கருதப்படும். தங்களது அரசு நேர்மையான மக்களுக்கு ஊக்கமளிக்கும். விரைவு கோர்ட்டுகளில் நீதிபதிகளின் எண்ணிக்கை இருமடங்காக்கப்படும். தேர்தல் அறிக்கையில் கூறப்படுள்ள அனைத்தும் மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதன்படி தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: