விதிமுறைகளில் கவனமாக இருங்கள் - பல்கலைகளுக்கு யு.ஜி.சி. அறிவுரை

தாங்கள் வழங்கும் பட்டங்கள் குறித்து, பல்கலைக்கழகங்கள், விழிப்பாகவும், கவனமுடனும் செயல்பட வேண்டுமென UGC அறிவுறுத்தியுள்ளது. டில்லி பல்கலையின் 4 ஆண்டு
இளநிலைப் பட்டப் படிப்பு தொடர்பாக எழுந்த சிக்கல்களை அடுத்து, இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து UGC தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பல்கலைகள், யு.ஜி.சி. வகுத்துள்ள விதிமுறைகளின்படியே பட்டங்கள் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். ஏற்கனவே, வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைத் தாண்டி, ஏதேனும் பட்டப் படிப்பை வழங்க விரும்பினால், அதுகுறித்து, குறைந்தது 6 மாதங்கள் முன்னதாகவே UGC அமைப்பிற்கு தெரிவித்துவிட வேண்டும்.

விதிமுறைகளை மீறி, எந்தப் பல்கலையும் பட்டம் வழங்கக்கூடாது. ஒரு பட்டத்தை வழங்கும் முன்னதாக, அது குறித்த தரம் மற்றும் தேவையான தகுதி விதிமுறைகள் குறித்து கட்டாயம் உறுதிசெய்ய வேண்டும்.

சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், முறையான அனுமதி பெறாமல், விதிமுறைகளுக்கு மாறான சிலவகை பட்டப் படிப்புகளை வழங்குகின்றன. இதனால், சட்டப் பிரச்சினைகளும், தேவையற்ற பல சிக்கல்களும் ஏற்படுகின்றன. எனவே, நாட்டின் பல்கலைகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் இதுகுறித்து கவனமுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பெரிய சர்ச்சைகளும், சட்டப் பிரச்சினைகளும் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம், டில்லி பல்கலைக்கழகம் தான் வழங்கி வந்த 4 ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்பை ரத்துசெய்தது என்பது நினைவிருக்கலாம்.

மேலும், 3 ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்பு என்ற சரியான விதிமுறைகளைப் பின்பற்றாமல், சில படிப்புகளை வழங்கி வருவது தொடர்பாக சில பல்கலைகளை UGC கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...