சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வீட்டு தோட்டம் அமைத்து பாதுகாக்கும் மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
ஊட்டி பாலவிகாஷ் ஆன்மிக
அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான நல் ஒழுக்க வகுப்பு சீனிவாச பெருமாள் கோவிலில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இயற்கையை பாதுகாக்க வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சிறுவர்களிடம் சிறுவயது முதல் இயற்கையின் மீது ஆர்வம் ஏற்படுத்தும் நோக்கில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. உணவும் சுற்றுச்சூழலும், பாரம்பரிய உணவுகள், விலங்குகள் பாதுகாப்பு, மூலிகைகளின் மருத்துவ பண்புகள் குறித்தும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆன்மிக வகுப்பு எடுக்கும் மூராஹரி, ஸ்ரீஹரி ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். வீட்டு தோட்டம் வளர்க்கும் விதமாக அனைத்து குழந்தைகளுக்கும் ரோஜா நாற்றுகள் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து நெஸ்ட் அறங்காவலர் சிவதாஸ் பேசினார்.
வீட்டுதோட்டம் அமைத்து பாதுகாக்கும் மாணவ மாணவியருக்கு சிறப்பு பரிசு வழங்க ஊட்டி பாலவிகாஷ் அமைப்பு முடிவு செய்தது. காயத்திரி, அமுதவல்லி, மஞ்சு உட்பட பலர் பங்கேற்றனர்.