தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து
வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையை பொறுத்தவரையில், இன்று (புதன்கிழமை) மாலை நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லூரில் 10 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் போலூரில் 9 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவலா, திருப்பூர் மாவட்டம் அவினாசி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., தர்மபுரி மாவட்டம் ஹரூர், காஞ்சீபுரம் மாவட்டம் கே.வி.கே. காட்டுக்குப்பம், கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா ஆபீஸ், தஞ்சாவூர் மாவட்டம் கும்பக்கோணம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ, கோவை மாவட்டம் வால்பாறை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் அனய்காரன்சத்திரம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...