கல்வியில் 3 நடைமுறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க 3 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று திருவனந்தபுரம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியல் அறிஞர் நெல்லை சு.முத்து கூறினார். வேலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற புத்தாக்க அறிவியல் ஆய்வு கண்காட்சி வேலூர்
ஹோலி கிராஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வை.குமார் தொடங்கி வைத்தார். இதில் வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் டி.மனோகரன், திருப்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் ப.பிரியதர்ஷினி, மெட்ரிக். பள்ளி ஆய்வாளர் செ.முருகேசன், மாவட்ட அறிவியல் அலுவலர் ஜே.ஆர்.பழனிச்சாமி, ஹோலி கிராஸ் மெட்ரிக். பள்ளி முதல்வர் மார்கிரெட் ராணி ஆகியோர் பங்கேற்றனர். மாலையில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் சு.முத்து சிறப்புரையாற்றியது: மாணவர்கள் கற்பதோடு, தொழில்நுட்பத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கேள், பார், படி என்ற வாசகங்களை பின்பற்றி கேள்வி கேட்பது, செய்முறைகளை செய்து பார்ப்பது, கசடற படிப்பது ஆகிய முறைகளைக் கையாள வேண்டும். நூலகத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து விண்வெளி ஆய்வு தொடர்பாக தனது அனுபவங்களை காட்சி மூலம் விளக்கினார். பரிசு பெற்ற பள்ளிகள் 22 ஒன்றியங்களைச் சேர்ந்த 475 மாணவ, மாணவியர் தங்கள் படைப்புகளை கண்காட்சியில் இடம்பெறச் செய்திருந்தனர். இதில் முதலிடத்தை மெட்டுமில்லவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி வி.சரண்யா பெற்றார். ஜோலார்பேட்டை வீரகெளண்டனூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் எஸ்.மணிகண்டன், வேலூர் லட்சுமி கார்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.அரவிந்தன் ஆகியோர் 2-வது பரிசை பெற்றனர். கதிரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சத்தியபிரசாத், திருப்பத்தூர் ஒன்றியம், பழைய ஆதிக்குப்பம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் பி.நித்திஷ்குமார், திமிரி ஒன்றியம், குட்டியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எம்.இந்திரகுமார் ஆகியோர் 3-ம் பரிசு பெற்றனர். கண்காட்சியில் இடம்பெற்ற அனைத்து படைப்புகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் செ.நா.ஜனார்த்தனன், க.ராஜா, சீ.முரளீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...