பூமிக்குள் புதையும் புதிய பள்ளிக் கட்டடம்..!

மதுரை அரும்பனுார் அரசு நடுநிலைப் பள்ளியில், 2010ம் ஆண்டில் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் புதைந்து வருகிறது. சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்துபோல் ஏற்படக்கூடாது என்பதால், மாணவர்கள் சமுதாய கூடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரும்பனுாரில் உள்ளது. பள்ளி வளாகத்தில் மூன்று வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம், 2010ல், ரூ.9.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. 6, 7, 8ம் வகுப்புகளுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டன. சில மாதங்களிலேயே கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது. எனினும் பெரிய அளவில் விரிசல் இருக்காது என நினைத்தனர். இந்நிலையில் கட்டடத்தின் ஒரு பகுதி பூமிக்குள் புதைந்தும், சாய்ந்தும் வருவதை மாணவர்கள் உணர்ந்தனர். வகுப்பறையின் தரைத்தளம் அரையடி ஆழத்திற்கு கீழே இறங்கியது. கட்டட விரிசல் மேலும் விரிவடைந்தது. ஆபத்தை உணர்ந்த ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விபரீதம் ஏற்படும் முன் மாணவர்களை காப்பாற்றும் நோக்கில், பள்ளி அருகில் உள்ள சமுதாய கூடத்திற்கு மாணவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட பல பள்ளி கட்டடங்கள், இன்றளவும் உறுதித்தன்மையுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் நிலையில், 2010ல் கட்டப்பட்ட இக்கட்டடம் பூமிக்குள் புதைந்து வருவது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி கென்னடி கூறுகையில், "கட்டடம் சேதம் குறித்து கலெக்டர் சுப்ரமணியன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டுவது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும்" என்றார். அடிப்படை வசதியற்ற சமுதாய கூடத்தால் மாணவர்கள் ஆசிரியர்கள் சிரமம் அடைகின்றனர். இனி கட்டப்படவுள்ள கட்டடமாவது உறுதித்தன்மையுடன் கட்ட வேண்டும். அதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...