ஐந்தில் ஒரு பள்ளி மாணவர்கள் கல்வி கற்க சிரமப்படுகிறார்கள்: ஆய்வில் தகவல்

சென்னையை சேர்ந்த நரம்பியல் மற்றும் உளவியல் நிபுணரான பி.எஸ். விருதகிரிநாதன், பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் ஆய்வு நடத்தினார். அதில் சென்னையில் பயிலும் மாணவர்களில் ஐந்தில் ஒருவர் கல்வி கற்க சிரமப்படுவதாக தெரியவந்துள்ளது.
சென்னையில் படிக்கும் பள்ளி மாணவர்களில் 16 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை கல்வி கற்க திணறுவதாக அவரது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. மாநிலம் முமுவதும் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 2 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு படிக்கும் 4000 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன் உலக அளவில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி 12 சதவிகித மாணவர்கள் கல்வி கற்க சிரமப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது அதன் சதவிகிதம் அதிகரித்து வருவது கண்கூடாக தெரிய வந்துள்ளது. படிப்பு, கணக்கு பாடம், எழுதுதல், இயந்திரக் கல்வி, மொழி ஆகிய ஐந்து பிரிவுகளை தெளிவாக புரிந்து கொள்ள மாணவர்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக நான்காம் வகுப்பு மாணவர்கள் தான் கல்வி கற்க பெரிதும் சிரமப்படுகின்றனர். இதற்கு இலக்கணம் குறித்து சரியான புரிதல் இல்லாதது தான் மிக முக்கிய காரணம் என்று விருதகிரிநாதன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...