சத்துணவு, அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? தமிழக அரசு விளக்கம்

சத்துணவு, அங்கன்வாடி மையப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து, முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.

சத்துணவு, அங்கன்வாடி மையப் பணியாளர்கள்
ஊதிய உயர்வு கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதுகுறித்து, பேரவையில் செவ்வாய்க்கிழமை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை தேமுதிக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கொண்டு வந்தன. அதற்கு, சமூக நலம், சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் பா.வளர்மதி அளித்த பதில்:

சத்துணவு, அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த ஊழியர்கள், பல்வேறு சங்கங்களை வைத்துள்ளனர். குறிப்பிட்ட சில சங்கங்கள் பேரவையின் ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களும், 42 ஆயிரத்து 699 சத்துணவு மையங்களும் உள்ளன. சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு உதவித் தொகையை ஆயிரம் ரூபாயாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

இந்த நிலையில், ஊதிய உயர்வு கோரி இப்போது கோரிக்கை வைக்கின்றனர். அதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலை உள்ளது. அவர்கள் பகுதி நேர பணியாளர்கள்தான் என்று மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படியே, மாநில அரசும் நடக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும், சத்துணவு, அங்கன்வாடி மையப் பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்த கோரிக்கை முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...