பிளஸ் 2 தனித்தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு சிறப்பு மையங்களில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு
ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்காக கல்வி மாவட்டம் தோறும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 14 என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாணவர் நலன் கருதி ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் ஆகஸ்ட் 15, 16, 17 தேதிகள் விடுமுறை தினம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு மையங்களின் விவரத்தை அறிந்துகொள்ள www.tndge.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...