பேராசிரியர் பணி - போட்டித்தேர்வின் இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு

ஐந்து பாடங்களில், உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கான போட்டித் தேர்வின் இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.


தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் உள்ள, 1,096 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை ஆசிரியர் தேர்வாணையம் நடத்தியது. பல நிலைகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் இயற்பியல் உட்பட, ஐந்து பாடங்களின் இறுதி மதிப்பெண் பட்டியல் நேற்று இரவு, ஆசிரியர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளிடப்பட்டது. மற்ற பாடங்களுக்கான இறுதி மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என, ஆசிரியர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...