டிச., 15 ல் பள்ளி மேலாண் குழு பயிற்சி துவக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் டிச., 15 ல், பள்ளி மேலாண் குழு பயிற்சி துவங்குகிறது.

அனைத்து ஒன்றியங்களில் ஆயிரத்து 60 வட்டார குறு வள மையங்களில் பள்ளி தலைமை ஆசிரியர், கிராமக்கல்வி குழு தலைவர், நலிவுற்ற குழந்தையின் பெற்றோர், ஊராட்சி தலைவர் அல்லது வார்டு உறுப்பினர், புரவலர், சுய
உதவிக்குழு உறுப்பினர் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பள்ளிகளுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகள், பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தல் தொடர்பாக கருத்து கேட்கப்படுகிறது. இரண்டு கட்ட பயிற்சி நிதியாக 11 ஒன்றியத்திற்கும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ரூ.17.74 லட்சம் நிதி ஒதுக்கப்படள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...