சிக்கல் !பள்ளி மேலாண்மை பயிற்சியில் !!!

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது. 6-14 வயது வரை உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், அடிப்படை வசதிகளை
மேம்படுத்துதல் போன்றபணிகளை இக்குழு கவனிக்கிறது.

இக்குழு உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதில் மேலாண்மை குழு சார்பில் தலைமை ஆசிரியர் உட்பட 6 பேர் பங்கேற்க வேண்டும். பயிற்சி டிச. 15 முதல் 17 வரை ஒரு பிரிவு, 18முதல் 20ம் தேதி வரை ஒரு பிரிவாக நடத்தப்படும்.

சாக்கோட்டை வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் அன்பரசு பிரபாகர் கூறியதாவது: டிச.15 முதல் 20 வரை தொடக்க பள்ளி மாணவருக்கான 2-ம் பருவ தேர்வு நேரம்.ஈராசிரியர் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பயிற்சிக்கு சென்றால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படும். இந்த மாதத்தில் 18 வேலை நாட்கள் மட்டுமே உள்ளன. அதில் 3 நாள் இப்பயிற்சிக்கும், மேலும் 2 நாள் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய கூட்டத்திலும் கழிந்துவிடும். இதனால் தேர்வுக்கு மாணவரை தயார்படுத்துவதில் சிரமம் உள்ளது. வரும் காலங்களிலாவது இதை தவிர்க்க வேண்டும், என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...