பாரதியார் வேடமணிந்து லிம்கா சாதனை


திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில், பாரதியாரின் 133-வது பிறந்தநாளையொட்டி 504 மழலையர்கள் பாரதியார் வேடமணிந்து லிம்கா சாதனையில் இடம் பெறுவதற்கான புதிய முயற்சியை வியாழக்கிழமை மேற்கொண்டனர்.


பள்ளியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட "பாரதியார் பிறந்த நாள் விழாவுக்கு' பள்ளியின் தாளாளர் விஷ்ணுசரண் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சுகுணா முன்னிலை வகித்தார்.

விழாவில், ஸ்ரீநிகேதன் பள்ளி, பாடசாலையைச் சேர்ந்த மழலையர்கள் 504 பேர் பாரதியார் வேடமணிந்து ஒரே மேடையில் தோன்றி லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சி மேற்கொண்டனர்.

இதுவரை, 300 மாணவர்கள் இதுபோன்று பாரதியார் வேடமணிந்து ஒரே மேடையில் தோன்றியதே அதிகபட்ச சாதனையாக லிம்கா புத்தகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதை முறியடிக்கும் முயற்சி இது என பள்ளியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இவ்விழாவில், திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி யஸ்வந்த்ராவ் இங்கர்சால், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், பெரம்பூர் கலிகி அரங்கநாதன் பள்ளியின் தாளாளர் தாயுமான சுவாமிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், சாட்சியாளர்களாகவும் கலந்துகொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...