ஆய்வில் அதிர்ச்சி !!!

ஐக்கிய நாடுகள்:பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில், அதிக முன்னேற்றம் அடைந்திருப்பது இந்தியா தான். கடந்த, 2000 முதல், 2012 வரையிலான காலகட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளில், 1.6 கோடி குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளன.'யுனெஸ்கோ' எனப்படும்,
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு மற்றும் 'யுனிசெப்' எனப்படும், ஐக்கிய நாடுகள் குழந்தைகள்

நிதியம் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2000 - 2012 வரை, தெற்காசியாவில், பள்ளி செல்லா குழந்தைகளாக இருந்தவர்களில், 2.3 கோடி பேர், பள்ளிகளில் காலடி எடுத்து வைத்துள்ளனர்; அவர்களில், 1.6 கோடி பேர் இந்திய குழந்தைகள் என்பது மகிழ்ச்சியான செய்தி.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பிற முக்கிய தகவல்களாவன:

* இந்தியாவில், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கையில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், இன்னமும், 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமலேயே உள்ளன.

* அல்ஜீரியா, புருண்டி, கம்போடியா, கானா, இந்தியா, ஈரான், மொராக்கோ, நேபாளம் போன்ற, 42 நாடுகளில், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, இந்த, 12 ஆண்டுகளில், பாதியளவு குறைந்துள்ளது.* எனினும், 2012ல், உலகம் முழுவதும் உள்ள சிறுவர், சிறுமியரில், 8 சதவீத சிறுவர்களும், 10 சதவீத சிறுமியரும் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர்.அதாவது, 5.8 கோடி சிறுவர், சிறுமியரில், 3.1 கோடி பேர் சிறுமியர்.* கடந்த, 2011ல், துவக்கப் பள்ளியில் சேரும் வயதில், பள்ளிக்கு செல்லாத, 14 லட்சம் குழந்தைகளில், 18 சதவீதம் சிறுமியர், 14 சதவீதம் சிறுவர்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளது. பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருப்பது,

உண்மையில் அதிர்ச்சிகரமான தகவலே.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...