பிளஸ் 2 தேர்வு மையங்களை இடமாற்றம் செய்ததால் தனித்தேர்வர்கள் அல்லல்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்வு மையங்களை இடமாற்றம் செய்ததால், தனித்தேர்வர்கள், குறித்த நேரத்துக்கு வந்தடைய முடியாமல், அல்லல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 5 முதல் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும், 2,377
தேர்வு மையங்களில், 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவர்கள் பள்ளிகள் மூலமும், 42 ஆயிரத்து 963 மாணவர்கள் தனித்தேர்வர்களாகவும் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு முதல், பள்ளிகள் மூலம் தேர்வெழுதும் மாணவர்களும், தனித்தேர்வர்களும் கலந்து எழுதும் வகையில், தேர்வு மையங்கள் மாற்றி, அமைக்கப்பட்டது.

தனித்தேர்வர்களுக்காக, செயல்பட்டு வந்த, சிறப்பு மையங்கள் நடப்புக் கல்வியாண்டில் தேர்வு செய்யப்படவில்லை. கோவை மாவட்டத்தில், 1700 தனித்தேர்வர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதி வருகின்றனர்.

தேர்வர்களை, ஒருங்கிணைக்கும் வகையில், கோவை டவுன்ஹால் சுற்றியுள்ள, குறிப்பிட்ட சில பள்ளிகளில் தேர்வர்கள் எழுதும் வகையில் மையங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், அன்னுார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களை கண்டறியவும், தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்திற்கு வரவும் முடியாமல், சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறியதாவது: நான் இரும்பறை பகுதியிலிருந்து, வருகிறேன். கடந்த ஆண்டுகளில், தனித்தேர்வர்களுக்கு மேட்டுப்பாளையத்தில், இரண்டு மையங்கள் இருந்ததால், வசதியாக இருந்தது. தற்போது, கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் மையம் அமைத்துள்ளனர். எங்கள் பகுதியிலிருந்து, மூன்று மணி நேரம் பயணித்து, தேர்வு மையத்திற்கு வரவேண்டியுள்ளது.

முதல் நாள், தேர்வு மையத்தை கண்டுபிடிக்கவே மிகவும் சிரமம் ஏற்பட்டது. போக்குவரத்து வழி மாற்றங்கள், நெரிசல் போன்றவற்றால், குறித்த நேரத்திற்கு வரமுடியவில்லை. அடுத்த தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளவும் முடியவில்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "சக மாணவர்களுடன் கலந்து தனித்தேர்வர்களும் தேர்வெழுதுவதால், தலைமை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, தற்போது தேர்வு மையங்கள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...