சாதனைப் பிஞ்சுகள்
சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளின் சாதனை
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், வீணான உணவுப் பொருள்களைக் கொண்டு பாலிதீன் பைகளை மக்க வைக்கும் நடைமுறை, புதிய
வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
9ஆம் வகுப்பு மாணவிகள் ஏ.பிரியங்கா, ஜெனிஃபர், 10ஆம் வகுப்பு ராகமாலினி ஆகியோரின் முயற்சியினாலும் ஆசிரியையின் வழிகாட்டுதலிலும் இந்தச் சாதனை நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து, கெட்டுப்போன பால், தயிர், சாதம், அழுகிய வெங்காயம், திராட்சை ஆகியன பயன்படுத்தப்பட்டன.
இந்த உணவுக் கலவையை ஒரு வாளியில் ஊற்றி, அதில் பாலிதீன் பைகளை நீளவாக்கில் வெட்டிப் போட்டு மூடி வைத்துவிட்டோம். அப்போதுதான் அந்த உணவுப் பொருள்களிலிருந்து பாக்டீரியா உருவாகும். இந்த பாக்டீரியா மூலமே பை மக்கும்.
அதிக பாக்டீரியா உருவாக்க கெட்ட பாலை மேலும் 2 முறை சேர்த்தோம். 120 நாள்கள் கழித்துப் பார்த்தபோது பாலிதீன் பையில் ஆங்காங்கே ஓட்டைகள் தென்பட்டன. இழுவைத் திறனும் குறைவாக இருந்தது. மக்குவதற்கு முன்பு 6 புள்ளி இருந்தது, பின்னர் 0.28 புள்ளியானது. மக்கிய பாலிதீன் அடங்கிய மண் மூலம் செடி வளர்த்துள்ளோம்.
இதனைப் பெரிய அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும்போது பாலிதீன் பையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை வெகுவாகக் குறைக்க முடியும் என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர்.