பள்ளி கல்லூரிகளில் வேத கணிதம் பாடத்தை கட்டாயமாக்குவது குறித்த அறிவிப்பு மத்திய அரசு தயாரித்து வரும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளகல்விக் கொள்கையை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. புதிய கல்விக்
கொள்கையில் இடம் பெற வேண்டிய 33 முக்கிய அம்சங்களை தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அந்த அமைச்சகம் இது தொடர்பாக கல்வியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.
இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்த கல்வி அமைப்புகள் தங்களது நீண்ட கால கோரிக்கைகளை புதிய கல்விக் கொள்கையில் இடம் பெறச் செய்வதற்கான ஆலோசனையை தீவிரப்படுத்தியுள்ளது. அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற இந்துத்துவா அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்லூரிகளில் வேத கணிதத்தை கட்டாயமாக்குவதற்கான செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்விகளை வட்டார மொழிகளில் பயிற்றுவிக்க வேண்டும் , தொழில் கல்வியுடன் கணித வரலாறு பயிற்றுவிக்கப்பட வேண்டும், ஆங்கிலம் கட்டாயம் பயிற்று மொழியாக இருக்கக்கூடாது, மதன்மோகன் மாளவியா, ராம் மனோகர் லோவியா போன்ற இந்துத்துவா தலைவர்களின் வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
ஆர்எஸ்எஸ் சார்ந்த அமைப்புகள் கொடுக்கும் இந்த பரிந்துரைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏற்றுக் கொள்ள கூடும் என்பதால் வேதக் கணிதத்தை கட்டாயமாக்குதல் உள்ளிட்ட அறிவிப்புகள் புதிய கல்விக் கொள்கைளில் இடம் பெறலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.