முடிவு எப்போது?; கேட்கும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள்

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளுடன், நேற்று, அமைச்சர் நடத்திய பேச்சில் தீர்வு ஏற்படவில்லை.


கோரிக்கைகள்:

பார்வையற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 200 பேருக்கு, உடனடியாக வேலை வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து காத்திருக்கும், 150 பார்வையற்ற பட்டதாரிகளை, உடனடியாக ஆசிரியர்களாக பணி அமர்த்த வேண்டும். முதுகலை பட்டம் பெற்று, தேசிய தகுதித் தேர்வுகளை முடித்து, பல ஆண்டுகளாக, வேலை இல்லாமல் காத்துக் கொண்டிருக்கும், 100 பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, உதவிப் பேராசிரியர் பணியிடங்களை, சிறப்பு நேர்காணல் மூலம், உடனடியாக வழங்க வேண்டும். பார்வையற்றோருக்கு, கடந்த ஆண்டு, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது போல், இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என்பது உட்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர், மூன்று நாட்களாக, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று பகல், 12:00 மணிக்கு சங்க நிர்வாகிகள், ஐந்து பேர், தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதியை சந்தித்து பேசினர். அவர்களின் கோரிக்கையை கேட்ட அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசித்து, முடிவு செய்வதாக தெரிவித்தார்.

இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் அசோக்குமார் கூறியதாவது: முடிவை தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும். எங்கள் சங்கத்தைச் சேர்ந்த ஏழு பேர், மூன்று நாட்களாக, சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் மயக்கமடையும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு முதலில் மருத்துவ சிகிச்சை அளிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...