ஜெ. வழக்கு: பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு மீது ஏப்.27-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் நியமனத்தை எதிர்த்து அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனு மீது வரும் 27-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் செயல்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி மதன் பி. லோகுர், ‘பவானிசிங் நியமனம் செல்லாது’ என்றும் நீதிபதி பானுமதி ‘செல்லும்’ என்றும் தீர்ப்பளித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி. பாண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்திஅர்ஜுனா ஆஜரானார். அவர் வாதாடிய போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பவானிசிங் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமன் ஆஜரானார். அவர் கூறியபோது, அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லும், அவர் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.

இந்த வழக்கு விசாரணை இன்றும் நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: "ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் நியமனத்தில் சில முறைகேடுகள் நடந்திருப்பதாகவே தெரிகிறது.

ஆனால், இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் புதிதாக விசாரணை நடத்த அனுமதிக்க மாட்டோம். இவ்விவகாரத்தை இன்னமும் தள்ளிப்போட நாங்கள் விரும்பவில்லை.

பவானி சிங் நியமனத்தை எதிர்க்கும் மனுதாரர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய நீதிமன்றத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதிக்கிறது. மனுதாரரின் எழுத்துபூர்வ வாதத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன் கருத்தில் கொள்ளும்" என்றனர்.

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வரும் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மே 12-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...