"அரசு அலுவலகங்களில் ஸ்டெனோகிராபர்களுக்கு தேவை அதிகம்"

அரசு அலுவலகங்களில் ஸ்டெனோகிராபர்களுக்கு தேவை அதிகம் உள்ளது என, வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

தி ஸ்டெனோகிராபர்ஸ் கில்டு சார்பில், சுருக்கு எழுத்தின் தந்தை சர் ஐசக் பிட்மேனின் 203வது பிறந்த நாள் விழா, சென்னை, தி.நகரில் நடந்தது.


அதில், வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர் பேசியதாவது: கல்லுாரியில் படிக்கும்போது, முக்கிய குறிப்புகள் எடுக்க, ஷார்டன், டைப்பிங் படித்தேன். ஆனால், இந்த இரண்டு படிப்புகளும், கல்லுாரி படிப்புடன் நின்று விடாமல், பல துறையில் சாதிக்க பெரிதும் உதவின.

ஒருவர், அலுவலகம் ரீதியான துறையில் சாதிக்க வேண்டும் என்றால், ஆங்கிலம் மற்றும் ஸ்டெனோகிராபிங் படிப்பை கற்க வேண்டும். கணினி, அலைபேசி என, பல தொழில்நுட்ப சாதனங்கள் வந்தாலும், அரசு அலுவலகங்களில், ஸ்டெனோகிராபர்களுக்கு தேவை அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...