முதுநிலை, முனைவர் படிப்பு; மாணவர் சேர்க்கை துவக்கம்

வேளாண் பல்கலையில், முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் பல்கலையில், 2015 - 2016ம் ஆண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.


முதுகலைப்படிப்பில், 33 துறைகளிலும், முனைவர் பட்டபடிப்பில், 26; ஒருங்கிணைக்கப்பட்ட முனைவர் பட்டப்படிப்பில், நான்கு; பகுதிநேர முனைவர் ஆராய்ச்சி படிப்பில், 26 துறைகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.வேளாண் பல்கலைக்கு உட்பட்ட கோவை, மதுரை, திருச்சி, குமுளூர், கிள்ளிகுளம், பெரியகுளம் மற்றும் மேட்டுப்பாளையம் கல்லுாரிகளில், 2015 - 2016 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, &'ஆன்லைன்&' வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பொதுப்பிரிவு மாணவர்கள், 1,000 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். www.tnau.ac.in என்ற பல்கலை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது, அனைத்து தேவையான ஆவணங்களுடன், விண்ணப்ப கட்டணத்துக்கான ரசீதையும் இணைத்து முதன்மையர், முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை - 641003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முதுகலை பட்டமேற்படிப்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற ஜூலை 13 கடைசி தேதி. முனைவர் பட்ட மேற்படிப்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற ஜூலை 24 கடைசி தேதி.நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை பற்றிய அனைத்து தகவல்களும் மின்அஞ்சல் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, அனைத்து மாணவர்களும் தங்களது மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

முதுநிலை முனைவர்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்

வந்து சேர வேண்டிய கடைசி நாள்: ஜூலை, 13 ஜூலை, 24

நுழைவுத்தேர்வு நடக்கும் நாள்: ஜூலை, 22 ஆக.,5

தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம் வெளியிடும் நாள்: ஆக., 4 ஆக., 11

மாணவர் சேர்க்கை மற்றும் கல்லுாரி துவங்கும் நாள்: ஆக.,17 ஆக.,18 முதல்

பருவம் பதிவு செய்ய வேண்டிய நாள்: ஆக., 19 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...