ஆசிரியர் டிப்ளமோ பயிற்சி; ஜூலை 1ல் கவுன்சிலிங்

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 1ம் தேதி முதல், 4ம் தேதி வரை, &'ஆன்லைன்&' மூலம் நடக்கும்&' என, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான எஸ்.இ.ஆர்.டி., அறிவித்துள்ளது.


இதுகுறித்து, எஸ்.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன், நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: வரும், 2015 - 16ம் கல்வி ஆண்டிற்கான, ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும், அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், பட்டயப் படிப்பில் சேர, ஜூலை, 1ம் தேதி முதல், 4ம் தேதி வரை, ஒற்றை சாளர முறையில், &'ஆன்லைன்&' மூலம், &'கவுன்சிலிங்&' நடக்கும். தற்போது, விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி நடந்து வருகிறது. வரும், 22ம் தேதி முதல், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, அழைப்பு கடிதம், தபாலில் அனுப்பப்படும்.

கவுன்சிலிங்கில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், தங்களின், 10ம் வகுப்பு, பிளஸ் 2 ஆகியவற்றின் அசல் சான்றிதழ், சாதி சான்றிதழ்; மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசு, சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினர் ஆகியோர், சிறப்பு பிரிவில், ஒதுக்கீடு பெற, அதற்கான சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...