தமிழக முதல்வர் திறந்து வைத்தப்பள்ளி, இரண்டு மாதங்களுக்குப்பின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில், பல்வேறு செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்த ஆதிவாசிகளின் குழந்தைகளின்
கல்வித்தரம் உயரும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், வால்பாறை காமராஜ் நகரில் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டுவருகிறது. அரசு கட்டடம் இல்லாத நிலையில், கோவை நேசம்டிரஸ்ட் எஸ்.எஸ்.ஏ.,இணைந்து நடத்தும் இந்த பள்ளியில், பல்வேறு செட்டில்மெண்ட் பகுதிகளை சேர்ந்த, 71 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.
இந்நிலையில், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், எஸ்.எஸ்.ஏ., சார்பில், 43.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட, உண்டு உறைவிடப்பள்ளி கட்டடத்தை, கடந்த ஜூன் மாதம், 10ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் பள்ளியை திறந்துவைத்தார்.
ஆனால் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படாததால், இரண்டு மாதங்களாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக இருந்த நிலையில், இந்தப்பள்ளி நேற்றுமுன்தினம் முதல் மாணவர்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில், எஸ்.எஸ்.ஏ.,திட்ட இணை இயக்குனர் சசிக்கலா, வால்பாறை கூட்டுறவு நகர வங்கி தலைவர் அமீது, துணைத்தலைவர் மயில்கணேஷ், நேசம் டிரஸ்ட் மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.