தமிழக சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. தேர்தல் கமிஷன், அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதுக்கு முன், மாவட்டம் முழுவதும் உள்ள எட்டு தொகுதிகளுக்கும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் நியமனம் நிறைவு பெற்றுள்ளது. தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடி அமைவிடம் இறுதி செய்யப்பட்டு, தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்த அறிக்கை, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டது. மாவட்டம் வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பெற்று, இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல்
முடிந்த மாநிலங்களில் இருந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டு, தமிழக மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 2,324 ஓட்டுச்சாவடிகள் இருப்பதால், கூடுதல் கையிருப்பு, பயிற்சிக்கு பயன்படுத்தும் இயந்திரம் என, 2,600 இயந்திரம் தேவையென கணக்கிடப்பட்டுள்ளது. பல்லடம் தாலுகா அலுவலகத்தில், குறைவான இயந்திரங்களே உள்ளன. எனவே, நம் மாவட்டத்துக்கு, 2,500 இயந்திரங்கள் தேவையென அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தேவையான இயந்திரங்களை ஒதுக்கப்பட்டதும், அவற்றை எடுத்து வருவதற்கு, அதிகாரிகள் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள் கூறுகையில், "லோக்சபா தேர்தல் முடிந்து, பல்லடத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், குஜராத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதனால், மற்ற மாநிலங்களில் உள்ள ஓட்டுப்பெட்டிகளை எடுத்து வர வேண்டியுள்ளது. தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்ததும், திருப்பூரில் இருந்து குழுவினர் சென்று, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, லாரியில் எடுத்துவர வேண்டும். அனுபவம் வாய்ந்த அலுவலர்கள் குழு அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது' என்றனர்.