இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை, கல்லுாரிகளின் அங்கீகாரம் உள்ளிட்ட வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக, வழக்கறிஞர்கள் தேவை' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துஉள்ளது.நாடு முழுவதும் இன்ஜி., கல்லுாரிகள், மேலாண்மை படிப்பு கல்லுாரிகள் மற்றும்
பல்கலைகளை, யு.ஜி.சி.,யுடன் இணைந்து, ஏ.ஐ.சி.டி.இ., நிர்வகித்து
வருகிறது. இந்த கல்லுாரி மற்றும் பல்கலைகளில், பேராசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கையில் ஏற்படும் பிரச்னை, கல்லுாரி அங்கீகார பிரச்னை, கல்வி கட்டண விதிமீறல் போன்ற பல பிரச்னைகள் குறித்து, தென் மண்டல நிறுவனங்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றன.ஏ.ஐ.சி.டி.இ.,க்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நடந்து வருகின்றன. எனவே, 'சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் ஆஜராக, உயர்கல்வியில் அனுபவம் பெற்ற வழக்கறிஞர்கள் தேவை' என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
விருப்பமுள்ளவர்கள், பிப்., 15க்குள் அனைத்து பதிவு விவரங்களுடன், ஏ.ஐ.சி.டி.இ.,யின், http://www.aicte-india.org இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.