பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை உடனே நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 7 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள்
காலியாக உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தர் பணிக் காலம் முடிவடைகிறது. இதற்காக நியமனம் செய்ய தேர்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும், எந்த முன்னேற்றமும் இல்லை. பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்களும் முடங்கிக் கிடப்பதால், கொள்கை அடிப்படையிலான முடிவுகளை எடுக்க முடியவில்லை.புதிய ஆய்வுகளைத் தொடங்கவும், பட்டமளிப்பு விழாக்களையும் நடத்தவும், காலியிடங்களை நிரப்பவும் முடியவில்லை. தமிழகம் வளர்ச்சியடைய வேண்டுமானால், உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம்.ஆகவே, துணைவேந்தர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும், பணி நிறைவு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே புதிய துணைவேந்தர் தேர்வுக்கான பணிகளைத் தொடங்கி, வெளிப்படையான முறையில் நியமனம் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.