எழுச்சி இந்தியா' திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் புதிய தொழில்முனைவோருக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
மேலும், இந்தத் திட்டத்துக்கான முதல்கட்ட தொகுப்பு நிதியாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் "எழுச்சி இந்தியா; வளர்ச்சி இந்தியா' (ஸ்டார்ட் அப் இந்தியா; ஸ்டேண்ட் அப் இந்தியா) என்ற திட்டத்தை கடந்த ஆண்டு தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில் இத்திட்டத்துக்கான செயல்முறைகள், கொள்கைகள் ஆகியவற்றை வரையறுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்தப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், "எழுச்சி இந்தியா' திட்டமானது ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் தனது வானொலி உரையின்போது மோடி தெரிவித்தார்.
இதனிடையே, புதிய திட்டத்துக்கான செயல்திட்டங்கள், வரைவுக் கொள்கைகள் ஆகியவை இறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர், "எழுச்சி இந்தியா' திட்டத்துக்கு கடந்த வாரம் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
"எழுச்சி இந்தியா' செயல்திட்டம் வெளியீடு: இந்நிலையில், புதிய தொழில்முனைவோருக்கான "எழுச்சி இந்தியா' திட்டத்துக்கான செயல்திட்ட வரைவினை, பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் சனிக்கிழமை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
"எழுச்சி இந்தியா' திட்டம் குறித்து தில்லி செங்கோட்டையில் நான் பேசினேன். அப்போது, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது சற்று கடினம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
எனினும், மனச்சோர்வு அடையாமல் நாம் முயன்றோம். அதன் பலன் இன்று கையில் கிடைத்துள்ளது. "எழுச்சி இந்தியா' திட்டம் செயல்வடிவம் பெற்ற இந்த நாளினை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகவே நான் கருதுகிறேன்.
துணிச்சல் தேவை: வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் வரலாற்றைப் படித்தால் நமக்கு ஒரு விஷயம் கண்கூடாக புலப்படும். அது, அவர்களின் ஆபத்தை எதிர்கொள்ளும் துணிச்சலான மனநிலையே.
இப்போது நாம் தொடங்கியிருக்கும் "எழுச்சி இந்தியா' திட்டமும் முழுக்க முழுக்க அத்தகைய மனநிலையைக் கொண்டவர்களுக்குத்தான் சரியாக இருக்கும்.
புதிய தொழில் தொடங்கப்போவதாக நீங்கள் (தொழில்முனைவோர்) கூறியவுடன், எதிர்மறையான பேச்சுகளையே முதலில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அவற்றையெல்லாம் புறந்தள்ளி, நீங்கள் தொழிலில் வளர்ச்சியடைய வேண்டும். முதன்முதலில் கொலம்பஸ் தனது பயணத்தை ஆரம்பிக்கும்போது, தான் எதனைக் கண்டுபிடிக்கப்போகிறோம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. பிறகு நம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் பயணித்ததன் விளைவாக அவர் கண்டறிந்தது ஒரு உலக வல்லரசை (அமெரிக்கா) அல்லவா? ஆபத்துகளை எதிர்கொள்ளும் துணிவு கொலம்பஸýக்கு இல்லாவிட்டால், இன்று அமெரிக்கா இல்லை.
அதேபோல், கடின உழைப்புடனும், துணிச்சலுடன் புதிய தொழிலைத் தொடங்கி நீங்கள் அதில் வெற்றிபெற வேண்டும்.
சலுகைகள்; விலக்குகள்...: முதன்முதலில் தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்பதால் உங்களுக்கு அரசு பல சலுகைகளையும், வரி விலக்குகளையும் வழங்கியிருக்கிறது. "எழுச்சி இந்தியா' திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் புதிய தொழில்முனைவோருக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தொழில்முனைவோர் மேற்கொள்ளும் தொழில் குறித்து அரசு சார்பில் முதல் 3 ஆண்டுகளுக்கு எந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது.
தொழில்முனைவோருக்கான காப்புரிமைக் கட்டணத்தில் 80 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
தொழில்முனைவோர்கள் தங்கள் சொந்த முதலீட்டுப் பங்குகளை விற்பனை செய்யும்போது, அதற்கு 20 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்படும்.
புதிய தொழில்முனைவோர்கள், சில காரணங்களுக்காக தங்கள் தொழிலைவிட்டு வெளியேற நினைத்தால் அதற்கான நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வெறும் 90 நாள்களுக்குள் இந்த நடைமுறைகள் முடிவடையும் வகையில், திவால் சட்டத்தின் சில ஷரத்துகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.
இந்தத் திட்டத்துக்காக நிதியுதவி அளிக்கும் வகையில் மத்திய அரசு ரூ.10,000 கோடியை தொகுப்பு நிதியாக ஒதுக்கியுள்ளது. அதில், ரூ.2,500 கோடியை முதல்கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், முதல்கட்டமாக 2.5 லட்சம் தொழில்முனைவோருக்கு கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மீது நம்பிக்கை: தொழில்முனைவோர்களுக்காக இந்த அளவுக்கு சலுகைகளை எந்த அரசும் வழங்கியதில்லை. நம் நாட்டின் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த முயற்சிகளை எடுத்திருக்கிறேன். நம் நாடு கோடிக்கணக்கான சவால்களை எதிர்கொண்டுள்ளன. அதே நேரத்தில், அவற்றை எதிர்கொண்டு முறியடிக்க நம்மிடம் கோடிக்கணக்கான இளைஞர்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் நரேந்திர மோடி.
குளிர்பானங்களில் 2% பழச்சாறு சேர்க்க பிரதமர் மோடி யோசனை
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களில் 2 சதவீதம் இயற்கையான பழச்சாறு சேர்த்தால் பழ உற்பத்தியாளர்களும் பயன்பெறுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்தார்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற புதிய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் "ஸ்டார்ட் அப் இந்தியா' கூட்டத்தில் பேசும்போது இதை அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அந்தக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
குளிர்பானங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் உயரதிகாரிகள் அண்மையில் என்னைச் சந்தித்தனர். அப்போது, குளிர்பானங்களில் பழச்சாற்றை சேர்க்கும் யோசனையை அவர்களிடம் தெரிவித்தேன்.
குளிர்பானங்களில் 2 சதவீத பழச்சாற்றை ஏன் சேர்க்க முடியாது? இந்த யோசனையை செயல்படுத்தினால் பழ உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்றார் பிரதமர் மோடி.
இந்தியாவில் குளர்பானங்களை அருந்துபவர்களின் எண்ணிக்கை அடுத்த 3 ஆண்டுகளில் 16.5-லிருந்து 19 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது