தலைவர்களே வரலாற்றை உருவாக்குகின்றனர் என்று, நம்மில் பெரும்பாலானோர் திடமாக நம்புகிறோம். சரியான தருணங்களில், சரியான தலைவர்கள் தோன்றாமல் போயிருந்தால், உலக வரலாறு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று, பல வரலாற்று ஆசிரியர்களும் கூட நம்புகின்றனர்.
காந்தியும், நேருவும் இல்லாத ஒரு விடுதலைப் போராட்டத்தையோ, லெனின் இல்லாத ஒரு ரஷ்யப் புரட்சியையோ, ஹோ சி மின் இல்லாத ஒரு வியட்நாமையோ, நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை. எனவே, இவர்கள் இல்லாமல் போயிருந்தால், இந்தியாவும், ரஷ்யாவும், வியட்நாமும், இன்று வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று, நாம் நம்புகிறோம்.
வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும், சில அரசியல் தலைவர்கள் இப்படித் தோன்றி விடுகின்றனர். அவர்களின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் மற்றவர்களிடம் இருந்து, அவர்களைத் தனித்துக் காட்டுகின்றன. அவர்கள் வரவு ஒரு புதிய திசையை, ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டுகிறது.
மக்கள், சிறிது சிறிதாக அவர்கள் பின்னால் அணி திரள்கின்றனர். அவர்கள் காட்டும் திசையில் செல்கின்றனர். அவர்கள் வகுத்துக் கொடுத்த நடைமுறையைப் பின்பற்றத் துவங்குகின்றனர். ஒரு புதிய சமூக மாற்றம் சட்டென்று நிகழ்கிறது. இந்த மாற்றத்தை ஒரு தலைவரே ஏற்படுத்துகிறார் என்று நாம் நம்புவதால், தலைவர் வழிபாடு இயல்பானதாக இங்கே மாறிவிட்டது.
அதன் விளைவுகளை நாம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஒரு தலைவரை இன்று பிரதானமாக முன்னிறுத்துகிறது. அவரே அதன் முகமாகவும்,
அடையாளமாகவும், கொள்கையாகவும் மாறியிருக்கிறார். அந்தக் கட்சியை எதிர்த்து கிளம்பும் இன்னொரு கட்சி, பதிலுக்கு இன்னொரு முகத்தை தன் கொள்கையாக முன்னிறுத்துகிறது. 'இந்த இரண்டும் வேண்டாம்; எங்களுக்கு ஓட்டளியுங்கள்' என்று கோரும் மூன்றாவது கட்சி, வேறொரு தலைவரை உயர்த்திப் பிடித்து, ஓட்டு சேகரிக்கிறது.
யார் நல்ல தலைவர்; யார் நேர்மையானவர் அல்லது யாரைத் தேர்ந்தெடுப்பது குறைந்த தீமையை ஏற்படுத்தும்?
இப்படித் தலைவர்களை மையப் படுத்தி மட்டுமே, அரசியலைப் புரிந்துகொள்ளும் அல்லது விவாதிக்கும் போக்கு பிழையானது. அரசியல் என்பது தலைவர்களிடம் துவங்கி, தலைவர்களிடம் முடிந்துவிடும் ஒரு துறை அல்ல. கட்சி, கோஷம், கூட்டணி, ஓட்டு வங்கி போன்றவற்றை தினம் தினம் விவாதிப்பதன் மூலம் நாம் அரசியலைப் புரிந்து கொண்டு விட முடியாது. யாருக்கு ஓட்டளிப்பது என்னும் கேள்வியை எழுப்பி, அதற்கான விடையை நோக்கி நம்மை நகர்த்திச் செல்வது மட்டுமே அரசியலாகி விடாது.
ஆனால், அரசியல் பற்றிய நம் புரிதல் இப்படித் தான் இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை,
ஒரு மாநிலத்தை அல்லது ஒரு நாட்டை ஒரு தலைவரின் கரங்களில் ஒப்படைப்பதை, ஒரு கடமையாக ஏற்று நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
வெகு விமரிசையாக நடைபெறும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்பதன் மூலம், நம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி விட்டதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். மற்ற விஷயங்களைத் தலைவர் பார்த்துக் கொள்வார் என்று ஒதுங்கிக் கொள்கிறோம்.
உண்மையில் தலைவர்களால் வரலாறு மாற்றி எழுதப்படுவதில்லை. தலைவர்கள் வரலாற்றை உருவாக்குவதும் இல்லை. காந்தியும், நேருவும், இல்லாமல் போயிருந்தால் இந்தியா சுதந்தரம் பெற்றிருக்காது என்னும் வாதம் தவறானது. லெனின் இல்லாமலும் ரஷ்யப் புரட்சி நிகழ்ந்திருக்கும். ஹோ சி மின்னும், நெல்சன் மண்டேலாவும் அந்தந்த தருணங்களில் தோன்றாமல் போயிருந்தாலும், வியட்நாமும், தென் ஆப்ரிக்காவும் இன்றுள்ள நிலைக்கு வந்து சேர்ந்திருக்கும்.
இதன் பொருள், தலைவர்கள் தேவையில்லை என்பதல்ல. ஒரு பொதுவான நோக்கத்துக்காக, மக்களை ஒருங்கிணைக்க, ஒரு சித்தாந்தத்தை உருவாக்க, ஒரு தெளிவான திசையைக் கண்டறிய, பல சமயங்களில் தலைவர்கள் உதவியிருக்கின்றனர்; போராட்டங்களை ஒழுங்குபடுத்தியிருக்கின்றனர்; தெளிவான இலக்கை அடைய முன் நின்று வழி நடத்தியிருக்கின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் ஒன்றுண்டு. அவர்கள் தலைவர்கள் என்பதால், இந்தப் பணிகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. 'நாங்கள் மக்களைவிட மேலானவர்கள்' என்று அவர்கள் கருதியதில்லை. சூழல்கள் அவர்களை உந்தித் தள்ளின. மக்களில் ஒருவராக இருந்த அவர்களை, சூழல்களே உருவாக்கின; வரலாறு அளித்த பாத்திரத்தை அவர்கள் ஏற்று வகித்தனர்.
அப்படியானால், வரலாற்றின் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியவர்கள் யார்; தலைவர்களை விடவும் மேலான, அவர்களைக் காட்டிலும் முக்கியமான சக்தி எது?
மக்கள்... ஆம்! மக்களே வரலாற்றின் உந்துசக்தி. தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒடுக்கப்பட்டோரும் சாமானிய பொதுமக்களும் இணைந்துதான், சமூக மாற்றங்களையும் பெரும் புரட்சிகளையும் விடுதலைப் போராட்டங்களையும் மேற்கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், அரசியல் என்பது தலைவர்களுக்கானது அல்ல, மக்களுக்கானது. எனவே, நமக்கான அரசியலைப் பற்றித் தான், நாம் அக்கறையுடன் பேச வேண்டியிருக்கிறது, விவாதிக்க வேண்டி யிருக்கிறது. அதைச் செய்ய வேண்டியதும் நாமே தான். நமக்கான அரசியலை, நாம் தான் வளர்த்தெடுக்க வேண்டும்.
அதற்கு, முதலில் தலைவர் மாயையில் இருந்து விடுபட வேண்டியது அவசியம். கார் சாவியை ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு, நிம்மதியாக பின் இருக்கை யில் சாய்ந்து அமர்ந்து, கண்கள் மூடி ஓய்வெடுத்துக் கொண்டால் வசதியாகத் தான் இருக்கும். ஆனால், நாம் விரும்பும் இடத்துக்குத் தான் போய் சேர்வோம் என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் இல்லை.
மருதன்