குரூப் 2 ஏ' பதவிக்கு நேர்காணல் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் 2 ஏ' பதவிக்கு, ஏப்., 12, 13ல் நேர்காணல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குரூப் 2 ஏ பிரிவில் அடங்கிய நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய, 2014 ஜூன், 29ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், டிச., 12ல் வெளியாகின.
இந்த பணியில் காலியாக உள்ள, 19 இடங்களை தேர்வு செய்ய, தேர்வாணைய அலுவலகத்தில் ஏப்., 12, 13ல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடக்கும். இதற்கான பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...