இந்தியாவில் புற்றுநோயால் நாள்தோறும் 50 குழந்தைகள் உயிரிழப்பு !

இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நாள் ஒன்றிற்கு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த குழந்தைகள் அனைவரும் ஒரு மாதம் முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.


டொரன்டோ பல்கலைக்கழகம் மற்றும் மும்பையில் உள்ள டாடா மெமோரியல் சென்டர் ஆகிய சர்வதேச புற்றுநோய் ஆய்வு நிறுவனங்கள் இணைந்து இந்தியா போன்ற வளரும் நாடுகளில் புற்றுநோயின் தாக்கம் குறித்த ஆய்வை நடத்தினர். இதில், புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 14 மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 27,000 க்கும் அதிகமான குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழந்து வருவது தெரிய வந்துள்ளது.

இந்தியா போன்ற குறைந்த அல்லது நடுத்தர வருமானம் ஈட்டுவோர் அதிகம் வாழும் நாடுகளில் அதிநவீன சிகிக்சை வசதிகள் இல்லாததும், நோய்கள் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாததுமே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் வளர்ந்த நாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போதிய சிகிச்சை வசதி அளிக்கப்படுவதால், 80 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் புற்றுநோயிலிருந்து குணமடைகின்றனர்.

2014ம் ஆண்டு லான்செட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் அதிகமான புற்றுநோய் பாதிப்புக்கள் கண்டறியப்படுகின்றன. இதே போன்ற உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில், இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் (2025 ல்)புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் எச்சரிக்கைகளால் புற்றுநோய், சர்க்கரை, இதய நோய்களால் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே உயிரிழப்போரின் எண்ணிக்கையை அடுத்த 10 ஆண்டுகளில் 25 சதவீதம் வரை குறைக்க மத்திய அரசு தேசிய அளவிலான திட்டங்களை வகுத்து வருகிறது. நோய் தடுப்பு வழிகளும் கண்டறியப்பட்டு வருகின்றன.

வாழ்க்கை முறை, ஆரோக்கிய உணவு, புகையிலை ஒழிப்பு, சர்க்கரை கண்டறிதல், மாசு கட்டுப்பாடு, நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரிசெய்தல் போன்ற செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு வரும் முயற்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இறங்கி உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...