பிஸியோதெரபி மருத்துவப் படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் !

முதுநிலை இயன்முறை (பிஸியோதெரபி) மருத்துவப் படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட முதுநிலை இயன்முறை மருத்துவப் படிப்புக்கு அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

                           இதற்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் சுகாதாரத் துறை இணையதளமான www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது.

                     இதற்கான விண்ணப்பக் கட்டணம் ஆயிரம் ரூபாய் ஆகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய மே 1 கடைசித் தேதியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு மே 2 கடைசியாகும்.

                      விண்ணப்பித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்ககத்தின் மூலம் தகுதிப் பட்டியல் வெளியிடப்படும். தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் இடங்கள் ஒதுக்கப்படும் என்று தேர்வுக்கு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...