நோய்களை உண்டாக்கும் உணவுக்கு வரியை விதிக்கிறது மத்திய அரசு !!!

துரித உணவுகள் மற்றும் சர்க்கரை கலந்த இனிப்பு பானங்களுக்கும் வரி விதிக்கவும், அவற்றிற்கான விளம்பர விதிகளை கடுமையாக்கவும் மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் சர்க்கரை நோயாளிகளின் அளவை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் குளிர் பானங்களை உட்கொள்வதை குறைக்க வேண்டும் எனவும், குறிப்பாக குழந்தைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை கழகமும் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் சமீப காலமாக சரக்கரை நோயாளிகள் மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதனை தடுக்க தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

சர்க்கரை நோய், உடல் பருமன், புற்றுநோய் போன்றவற்றை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என பல்வேறு அமைச்சகங்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. குழந்தை பருவத்தில் இருந்தே அதிகரித்து வரும் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சர்க்கரை அதிகம் கலந்து குளிர்பானங்களாலேயே சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சர்க்கரை நோய் ஆய்வு கழகமும், துரித உணவுகள், மென்பானங்கள், ஆற்றல் பானங்கள் அதிகம் அருந்துவதாலேயெ உடல் பருமன் போன்ற பாதிப்புக்கள் வருவதாக உலக சுகாதார மையமும் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் 2000ம் ஆண்டு 32 மில்லியனாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2013ம் ஆண்டு 63 மில்லியனாக இருந்தது. அடுத்த 15 ஆண்டுகளில் இது 101.2 மில்லியனாக அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. சரக்கரை, உப்பு, கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை தென்கிழக்கு ஆசிய மக்கள் அதிகம் சாப்பிடுவதே இத்தகைய நோய்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இத்தகைய நோய்களை கட்டுப்படுத்துவதற்காக, சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் துரித உணவுகளுக்கு புதிய வரியை விதிக்கவும், அவற்றின் விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...