முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று துவங்கியது. மாற்றுத்திறனாளிகளில், 14 பேருக்கு இடம் கிடைத்தது.
தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, மாநில
ஒதுக்கீட்டின் கீழ், 854 இடங்கள் உள்ளன. சென்னை, ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள, அரசு பல்நோக்கு மருத்துவமனையில், கலந்தாய்வு, நேற்று துவங்கியது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 18 பேர் பங்கேற்றனர்; 14 பேர் விரும்பிய படிப்புகளை தேர்வு செய்தனர். மீதம், 840 இடங்கள் உள்ளன. ''மேலும், விவரங்களுக்கு, www.tn.health.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்,'' என, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறினார்.