போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. இந்த வருடம் பயிற்சி பள்ளியில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கு 17-ஆம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு சார்பில் தமிழ்நாட்டில் 29 3 மாவட்ட ஆசிரியர்
பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 38, சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 320 உள்ளன.
இதில் மொத்தம் 13 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன.இந்த பயிற்சி இடங்களுக்கு பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட்டு படித்து இடைநிலை ஆசிரியர் பணிக்கு பணியமர்த்தப்படுவார்கள். அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. இதனால் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர கடும் போட்டி நிலவியது. வெளிமாநிலங்களில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த சிலர் தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலை மாறிவிட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதித் தான் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆசிரியர்களாக வரவேண்டும் என்று மத்திய அரசும், மாநில அரசும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் பல மூடப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாததால் அந்த நிறுவனத்தை நடத்த முடியாமல் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.அரசு சார்பில் தமிழ்நாட்டில் 29 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஏற்கனவே உள்ளன. தற்போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி மேலும் 3 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அந்த 3 நிறுவனங்களில் இந்த வருடம் முதல் முதலாக மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. அரசு மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்தால் அவர்களுக்கு கல்விக் கட்டணம் மிகக்குறைவு. எனவே புதிய நிறுவனங்களை மாணவர்கள் வரவேற்கும் நிலை உள்ளது.அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 38 இருக்கின்றன. சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்320 உள்ளன. மொத்தம் 13 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன.இந்த ஆண்டுக்கு இதுவரை 3,510 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட உயர்வு. 17-ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம். அதனால் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.