தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு: சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.

நிகழ் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பில் சேர்வதற்கான கால அவகாசம், வரும் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


நிகழ் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் தேதி ஜூன் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினர் ஆகியோர் ரூ.250, இதர பிரிவினர் ரூ. 500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...