ஆதார் பதியாவிட்டால் "காஸ்' மானியம் கிடைக்காது:செப்., 30 வரை அவகாசம் வழங்கல்...!

ஆதார் எண் பதிவு செய்யாதவர்களுக்கு காஸ் மானியம் கிடைக்காது என, ஏஜென்சிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. விடுபட்டவர்கள் செப்.,30ம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.




திருப்பூர் மாவட்டத்தில், 3.05 லட்சத்துக்கும் அதிகமான வீட்டு உபயோக காஸ் இணைப்புகள் உள்ளன. கடந்த ஓராண்டாக, காஸ் சிலிண்டர் மானியம், வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. திட்டம் துவங் கிய போது, நுகர்வோரின் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஆகியவை, காஸ் ஏஜன்சிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆதார் அட்டை இல்லாதவர்கள், வங்கி கணக்கு விவரத்தை மட்டும் கொடுத்து, காஸ் மானியம் பெற்று வருகின்றனர்.

அரசு மானியம் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, காஸ் நுகர்வோர், தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், காஸ் ஏஜன்சிகள் தங்களது வாடிக்கையாளரிடம் பேசி, ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்தன.மாவட்டத்தில், ஆதார் பதியும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால், ஜூன் 30ம் தேதிக்குள், ஆதார் எண்ணை, காஸ் ஏஜன்சியிடமும், வங்கியிலும் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அவகாசம் முடிந்து விட்டதால், ஆதார் எண்ணை பதிவு செய்யாதவர்களுக்கு, இம்மாதத்தில் இருந்து சிலிண்டருக்கான மானியம் கிடைக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.



இருப்பினும், செப்., 30ம் தேதி வரை, ஆதார் எண்ணை பதிவு செய்ய மறு வாய்ப்பு வழங்கும் வகையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காஸ் ஏஜன்சியினர் கூறுகையில், "ஆதார் எண் சமர்ப்பித்த நுகர்வோருக்கு மட்டுமே, மானியம் கிடைக்கும். கடந்த, 30ம் தேதியுடன் அவகாசம் முடிந்துவிட்டது. இதுவரை ஆதார் பதிவு செய்யாதவருக்கு, இனி, மானியம் கிடைக்காது."ஆதார் எண் பதிவு செய்யாதவர்கள், செப்., 30ம் தேதிக்குள், ஆதார் கார்டை பெற்று, எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண்ணை பதிவு செய்தாலும், காஸ் சிலிண்டருக்கான மானியம், செப்., 30ம் தேதிக்கு பிறகு மொத்தமாகத்தான் வழங்கப்படும். சிலிண்டர் எடுத்த உடன் வழங்கப்படாது.

"ஆதார் எண்ணை பதிவு செய்ய முடியாதவர்கள், மூன்று மாதத்துக் குள், சுய உறுதிமொழி படிவத்தை, காஸ் ஏஜன்சியிடம் பெற்று, பூர்த்தி செய்து கொடுத்து, மானியம் பெறலாம். அவ்வாறு உறுதிமொழி படிவம் கொடுத்தாலும், மூன்று மாதங்களுக்கு மொத்தமாகத்

தான் மானியம் வழங்கப்படும்,' என்றனர்.



குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரி கூறுகையில், "கலெக்டர் அலுவலகம், மாநக ராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களில், நிரந்தர ஆதார் மையங்கள் இயங்குகின்றன. விடுபட்டவர்கள், உடனடியாக ஆதார் அட்டைக்கு பதிவு செய்யலாம். காஸ் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டுமெனில், மூன்று மாதத்துக்குள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்,' என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...