அடுத்த 5 ஆண்­டு­களில் இயந்­தி­ர­ம­ய­மாகும் இந்­திய ஐ.டி., துறை; 6.40 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்

இந்­திய ஐ.டி., துறை வேக­மாக இயந்­தி­ர­ம­ய­மாகி வரு­வதால், அதிக திறன் தேவை­யற்ற அடித்­தட்டு பணி­களில், அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 6.4 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும்’ என, அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, ஆய்வு நிறு­வ­ன­மான எச்.எப்.எஸ்., தெரி­வித்­துள்­ளது.

ஐ.டி., எனப்­படும் தகவல் தொழில்­நுட்பத் துறை, கணினி சார்ந்த செயல்­பா­டு­களை கொண்­டுள்­ளது. இதில், ‘ஹார்­டுவேர்’ எனப்­படும், சாத­னங்கள், உதி­ரி­பா­கங்கள் உள்­ளிட்­ட­வற்றின் தயா­ரிப்பில், ‘ரோபோ’ எனப்­படும், இயந்­தி­ரங்­களை ஈடு­ப­டுத்­து­வது அதி­க­ரித்து வரு­கி­றது. இதனால், ‘அசெம்­பிளிங்’ போன்ற, உதி­ரி­பா­கங்­களை ஒன்­றி­ணைப்­பதில், மனி­தர்­களின் பங்­க­ளிப்பு, குறைந்து வரு­கி­றது. இந்­நி­லையில், அதிக திறன் தேவைப்­ப­டாத தொழில்­களும், வேக­மாக இயந்­தி­ர­ம­ய­மாகி வரு­வ­தாக, எச்.எப்.எஸ்., ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்: வரும், 2021ல், ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., எனப்­படும் பணி­களை பிற­ரிடம் ஒப்­ப­டைத்து பெற்றுக் கொள்ளும் தொழிலில், இயந்­தி­ரங்­களின் பங்கு அதி­க­ரிக்கும். இதனால், ஐ.டி., துறையில், அடிப்­படை கல்­வி­ய­றி­வுடன், அதிக திறன் தேவை­யற்ற பிரி­வு­களில், 6.40 லட்சம் பேர் வேலை இழப்பர். சர்­வ­தேச அளவில், ஐ.டி., துறை வேலை­வாய்ப்பு, 9 சத­வீதம் குறையும். 14 லட்சம் பேரின் பணி பறிபோகும். இதில், அமெ­ரிக்கா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ் உள்­ளிட்ட நாடு­களும் விதி­வி­லக்­கல்ல. ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., துறை­களில், 37 லட்சம் பேர் பணி­பு­ரி­கின்­றனர். இதில், பி.பி.ஓ., மற்றும் அடிப்­படை கட்­ட­மைப்பு பிரி­வுதான் அதிகம் பாதிக்­கப்­படும். குறை­வான திறன் தேவைப்­படும் பணி­களில், 30 சத­வீ­தத்தை, இயந்­தி­ரங்கள் எடுத்துக் கொள்ளும்.
ஒரே வகை­யான செயல்­பா­டு­களை, திரும்பத் திரும்ப செய்யும் பணிகள்; அதிக கல்­வி­ய­றிவு தேவைப்­ப­டாத வேலைகள் ஆகி­யவை, இப்­பி­ரிவில் அடங்கும். இதில், ‘ஆர்­டி­பி­ஷியல் இன்­டெ­லிஜன்ஸ்’ எனப்­படும், செயற்கை நுண்­ண­றி­வுடன் செயல்­படும் இயந்­தி­ரங்கள் தான், வேலையை பறிக்கக் கூடி­ய­வை­யாக இருக்கும். இது, ‘கால்­சென்டர்’ போன்ற, அழைப்பு மையப் பணி­களில், தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்.
அதே­ச­மயம், இதே­கா­லத்தில், நடுத்­த­ர­மான ஆற்றல் தேவைப்­படும் பணி­களில், வேலை­வாய்ப்பு, 8 சத­வீதம் அதி­க­ரிக்கும். இப்­ப­ணி­களில், சவால்­க­ளுக்கு தீர்வு காண்­பதில், மனி­தர்­களின் ஒத்­து­ழைப்பு தேவைப்­படும். அதிக திறன் தேவைப்­படும் பணி­களில், வேலை­வாய்ப்பு, 56 சத­வீதம் உயரும். இதில், கருத்­து­ரு­வாக்கம், பிரச்­னைக்கு தீர்வு காண்­பது, ஆய்வு செய்­வது உள்­ளிட்ட பல்­வேறு பணி­க­ளுக்கு, இயந்­தி­ரங்­களை விட, மனித மூளை மிகவும் அவ­சியம்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுஉள்­ளது.
‘இப்­போதே கூற முடி­யாது’மனி­தர்கள் செய்யும் தொழில்கள், இயந்­தி­ர­ம­ய­மா­வதும், ‘ரோபோ’ எனப்­படும், இயந்­திர மனி­தர்கள் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துவர் என்­ப­தையும், தற்­போ­தைய சூழலில் கணிப்­பது கடினம். தொழில்கள் இயந்­தி­ர­ம­ய­மா­வதால், ஓர­ள­விற்கே பாதிப்பு இருக்கும். அதே­ச­மயம், புதிய தொழில்­நுட்­பங்­களின் அறி­முகம், பயன்­பாடு போன்­ற­வற்றால், அனைத்து துறை­க­ளிலும் வேலை வாய்ப்பு பெருகும். சங்­கீதா குப்தா, மூத்த துணை தலைவர், ‘நாஸ்காம்’

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...