தமிழகத்தில் உள்ள, 41 இன்ஜி., கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பிற்கு விண்ணப்பிக்க, நாளை மறுநாள் கடைசி நாள். தமிழகத்தில், ஆர்கிடெக்ட் எனப்படும் பி.ஆர்க்., படிப்பு, 41 இன்ஜி., கல்லுாரிகளில் நடத்தப்படுகிறது.
மத்திய அரசின், ஆர்கிடெக்சர் கவுன்சிலின் அங்கீகாரத்துடன் அண்ணா பல்கலை இணைப்பில் இந்த கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் மொத்தமுள்ள, 2,400 இடங்களில், 1,780 இடங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, ஜூன், 25ல் துவங்கியது. விண்ணப்பங்களை பதிவு செய்து விண்ணப்ப கட்டணம் செலுத்த, நாளை மறுநாள் கடைசி நாள். ஜூலை இறுதி வாரத்தில் கவுன்சிலிங்கை நடத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.